அதிசயம் ஆனால் உண்மை... சிக்கனால் கோமாவிலிருந்து மீண்ட தைவான் இளைஞர்!

அதிசயம் ஆனால் உண்மை... சிக்கனால் கோமாவிலிருந்து மீண்ட தைவான் இளைஞர்!

அதிசயம் ஆனால் உண்மை... சிக்கனால் கோமாவிலிருந்து மீண்ட தைவான் இளைஞர்!
Published on

தைவான் நாட்டில் உள்ள Hsinchu County பகுதியில் கடந்த ஜூலை மாதம் நடந்த பயங்கரமான விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயது இளைஞரான சிஹு பலத்த காயமடைந்துள்ளார்.

உடல் முழுவதும் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு அவசர சிகிச்சையும் மேற்கொண்டுள்ளனர். 

இருப்பினும் விபத்தில் சிக்கிய அதிர்ச்சி அவரை கோமோ நிலைக்கு தள்ளியுள்ளது.

‘அவன் இங்கு வரும்போது நினைவின்றி இருந்தான். அறுவை சிகிச்சை செய்தோம். பரிசோதனையில் அவன் கோமா ஸ்டேஜ் 3 நிலையில் இருப்பதை அறிந்து கொண்டோம். அதனால் மருத்துவமனையில் அவனை தொடர் கண்காணிப்பில் வைத்தோம்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் சுமார் 62 நாட்களுக்கு  பிறகு  கோமாவில் இருந்து  சிஹுவுக்கு சுய நினைவு திரும்பியுள்ளது. ஆனால் அதற்கு காரணம் மாத்திரை, மருந்துகள் உதவவில்லை.. மாறாக அவரது அண்ணன் பேசிய பேச்சு அவருக்கு நினைவு திரும்ப காரணமாகியுள்ளது. 

‘தம்பிக்கு சிக்கன் பில்லெட் என்றால் ரொம்ப இஷ்டம்’ என அவர் சொன்னவுடன் சிஹுவின் நாடி துடிப்பு வேகமாக துடிக்க ஆரம்பித்தது. நிதானமாக அவர் சுய நினைவுக்கு வர ஆரம்பித்தார் என்கிறார் அவரை கவனித்து வந்த செவிலியர். 

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் மருத்துவமனையில் தனது மறுபிறப்பை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com