‘ஓடுதளம், நீச்சல் குளம், கூடைப்பந்து’: விளையாடிக் கொண்டே ரயில் பயணம்

‘ஓடுதளம், நீச்சல் குளம், கூடைப்பந்து’: விளையாடிக் கொண்டே ரயில் பயணம்

‘ஓடுதளம், நீச்சல் குளம், கூடைப்பந்து’: விளையாடிக் கொண்டே ரயில் பயணம்
Published on

விளையாட்டுகள் மீது மக்களுக்கு உள்ள ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தைவான் நாட்டில் உள்ள சுரங்க ரயில்களில் பல்வேறு விளையாட்டுகளை விளையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தைவானின் தலைநகரான தைபேய் நகரில் உள்ள சுரங்க ரயில்களில் விளையாடிக் கொண்டே பயணம் செய்யும் வசதியை தைவானின் பொது போக்குவரத்து நிறுவனமான ஈஸிகார்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது. சுரங்க ரயில்களின் தளத்தில் நீச்சல் குளம், ஓடுதளம், சாக்கர் விளையாடும் தளம், கூடைப்பந்து மைதானம் போன்றவற்றை வடிவமைத்துள்ளது. இந்த ரயில்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பயணம் செய்யும் அனைவரும் விளையாடி மகிழலாம்.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியாக உலகளவில் புகழ்பெற்ற யுனிவர்சியேட் 2017 போட்டி தைபேய் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com