‘தைவான் டிராவலாக்' | வரலாற்றில் முதல்முறை.. மாண்டரின் மொழி நாவலுக்கு சர்வதேச புக்கர் பரிசு!
உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருது சர்வதேச புக்கர் பரிசு. நடப்பாண்டுக்கான இந்த விருது, 'தைவான் டிராவலாக்' என்ற நாவலுக்கு அறிவிக்கப்படுள்ளது. 1930களில் ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்த தைவானின் பின்னணியில் காதல் மற்றும் காலனித்துவ அதிகாரத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
உலக அளவில் ஆங்கில இலக்கியப் புனைவுக்காக வழங்கப்படும் உயரிய விருது சர்வதேச புக்கர் பரிசு. நடப்பாண்டுக்கான இந்த விருது, 'தைவான் டிராவலாக்' என்ற நாவலுக்கு அறிவிக்கப்படுள்ளது. தைவான் எழுத்தாளர் யாங் சுவாங்-சி எழுதிய இந்த வரலாற்று நாவலை லின் கிங் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். புக்கர் பரிசு வரலாற்றில், மாண்டரின் சீன மொழியில் எழுதப்பட்ட நாவல் ஒன்று இந்த உயரிய விருதைப் பெறுவது இதுவே முதல்முறையாகும். 1930களில் ஜப்பான் ஆக்கிரமிப்பில் இருந்த தைவானின் பின்னணியில் காதல் மற்றும் காலனித்துவ அதிகாரத்தை மையமாகக் கொண்டு இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
குறிப்பாக, தைவான் ஜப்பானிய ஆட்சியின் கீழ் இருந்தபோது, இரண்டு பெண்கள் தைவான் முழுவதும் மேற்கொண்ட சமையல் கலைப் பயணத்தைப் பின்தொடர்கிறது. இதற்கான 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசுத்தொகை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் இருவருக்கும் சமமாகப் பகிர்ந்து வழங்கப்படவுள்ளது. சர்வதேச புக்கர் பரிசு பெற்றது குறித்து லின் கிங், “காலம் எவ்வளவு கடினமாக இருந்தாலும், மனிதர்கள் எப்பொழுதும் மனநிறைவின் சிறு துணுக்குகளையும், அன்பின் ஆழமான ஊற்றுகளையும் கண்டறிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

