87 பேர் பலியான ரசாயன தாக்குதலுடன் தொடர்பில்லை: சிரியா திட்டவட்டம்
87 பேர் பலியான ரசாயன தாக்குதலுடன் எந்த தொடர்பும் இல்லை சிரிய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் தங்களுக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை என அந்நாட்டு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர். இதில் சரின் எனப்படும் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ரசாயனம் பயன்படுத்தப் பட்டதாகக் கண்டறியப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு அரசுப படைகளே காரணம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து சிரியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஃபைசல் மெக்டாட் கூறும்போது, ’சிரிய அரசு தனது சொந்த மக்களை எப்போது கொலை செய்யாது. ஜபாட் ஃபாடே அல் ஷாம் போன்ற அடிப்படைவாத குழுக்களை மீது ராணுவம் தாக்குதல் நடத்தும் போதும் கூட ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம். எதற்காக எங்கள் மக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும்’என்று கூறினார்.