சிரியாஎக்ஸ் தளம்
உலகம்
சிரியா | ஆளும் அரசுக்கு எதிராக கடும் சண்டை.. ஹமா சிறையைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!
சிரியாவில் உள்ள ஹமா சிறையை கைப்பற்றி விட்டதாக அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
சிரியாவில் உள்ள ஹமா சிறையை கைப்பற்றி விட்டதாக அரசுக்கு எதிராக போராடி வரும் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
சிரியா போர்எக்ஸ் தளம்
அதிபர் அல்-அசாத் அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடி வரும் கிளர்ச்சியாளர்கள், அரசு படைகள் வசமிருக்கும் நகரங்களை தொடர்ச்சியாக கைப்பற்றி வருகின்றனர். அலெப்போ, டெல்ரிப்ஃபாட் ஆகிய நகரங்களை தொடர்ந்து ஹமா நகரை தங்கள் வசம் கொண்டு வந்துள்ள கிளர்ச்சியாளர்கள், அங்குள்ள சிறையில் இருக்கும் கைதிகளை விடுவித்தனர்.
இதுதொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ள கிளர்ச்சிப் படையினர், தங்கள் நேரம் வந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அரசு படைகளின் வசமுள்ள டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வரும் நிலையில், இத்லிப் நகரை கைப்பற்ற கடுமையாக சண்டை நடந்து வருகிறது.