உலகம்
சிரியாவில் விஷ வாயு தாக்குதலுக்கு 72 பேர் உயிரிழப்பு
சிரியாவில் விஷ வாயு தாக்குதலுக்கு 72 பேர் உயிரிழப்பு
சிரியாவின் இட்லிப் பகுதியில் நடத்தப்பட்ட விஷவாயுத் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
வான்வழியாக வீசப்பட்ட குண்டு மூலமாக நச்சுப்புகை வெளியேறியதாக பிரிட்டனில் இருந்து செயல்படும் யுத்தக் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இது எந்தவகையான நச்சுவாயு என்பது குறித்து உறுதி செய்யப்படவில்லை. தாக்குதலை நடத்தியது யார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை. அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிரான ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இந்தப் பகுதி உள்ளது. இந்த தாக்குதலில் 72 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.