உக்ரைனில் மொட்டை மாடியில் ரகசிய குறியீடு வரைந்து ரஷிய ராணுவம் தாக்குதல்?
கீவ் நகரில் உள்ள கட்டடங்களின் மொட்டை மாடியில் அடையாளங்களை வரைந்து அதை குறி வைத்து ரஷ்யப் படைகள் தாக்குவதாக உக்ரைன் அரசு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் கெர்சன், கார்கீவ், தலைநகர் கீவ் ஆகியவற்றின் மீது ரஷிய ராணுவம் தாக்குதலை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கீவ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களில் ‘X’ குறியீடு இடப்பட்டுள்ளது. இந்த குறியீடு ரஷிய ராணுவத்தினரால் குறிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த குறியீடு உள்ள இடங்களை குறிவைத்து ரஷியா தாக்குதல் நடத்துவதற்காக இப்படி செய்திருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், குறியீடு இடப்பட்ட கட்டிடங்களுக்கு கீழ் கேஸ் பைப் லைன் செல்வதால், இதனை குறிவைத்து தாக்குவதற்காக கூட குறியீட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால், பொதுமக்கள் இதுபோன்ற குறியீடுகளை பார்த்தால் உடனடியாக அழித்துவிட வேண்டும். அல்லது மறைத்து விட வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிக்க: ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்தது பெலாரஸ் படைகள்