’’வலியில்லாமல் சாக மெஷின்’’ - அறிமுகப்படுத்தியது ஸ்விட்சர்லாந்து

’’வலியில்லாமல் சாக மெஷின்’’ - அறிமுகப்படுத்தியது ஸ்விட்சர்லாந்து

’’வலியில்லாமல் சாக மெஷின்’’ - அறிமுகப்படுத்தியது ஸ்விட்சர்லாந்து

வலியில்லாமல் சாகிற இயந்திரத்தை ஸ்விட்சர்லாந்து அறிமுகப்படுத்தி இருக்கிறது.

கருணைக்கொலை செய்ய நினைப்பவர்கள் மற்றும் தற்கொலை செய்ய நினைப்பவர்கள் வலியில்லாமல் நிமிடத்தில் உயிரிழக்கும் வகையில் இந்த இயந்திரமானது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஹைபோக்சியா அல்லது ஹைபோகேப்னியா என்று சொல்லக்கூடிய முறையை இந்த இயந்திரத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி சவப்பெட்டிபோல் அமைந்திருக்கும் இந்த இயந்திரத்திற்குள் சென்று படுத்ததும் கண் இமைக்கும் நேரத்தில் உடலின் ஆக்சிஜன் அளவு குறைந்து ஒரு நிமிடத்திற்குள் மூச்சு நின்றுவிடும். இந்த கருணைக்கொலை சாதனத்திற்கு (euthanasia device) ‘சார்கோ’(Sarco) என்று பெயரிட்டுள்ளனர்.

கருணைக்கொலை மற்றும் தற்கொலையை சட்டப்பூர்வமாக்கிய நாடுகளில் இந்த இயந்திரத்தின்மூலம் வலியின்றி அமைதியான முறையில் உயிரை விடலாம் என்று கூறியிருக்கிறது ஸ்விட்சர்லாந்தின் ஒரு நாளிதழ். ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த டாக்டர் பிலிப் நிட்ஸ்ச்கே என்பவர் இந்த இயந்திரத்தை வடிவமைத்திருக்கிறார். இந்த இயந்திரத்திற்குள் நைட்ரஜன் இருப்பதால் ஆக்சிஜன் வெகு சீக்கிரத்தில் குறைந்து மரணம் நிகழும் என்பதால் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com