ஊரடங்கை பாதிக்காமல் போராட்ட வடிவத்தை மாற்றிய பசுமை போராளிகள்...!

ஊரடங்கை பாதிக்காமல் போராட்ட வடிவத்தை மாற்றிய பசுமை போராளிகள்...!

ஊரடங்கை பாதிக்காமல் போராட்ட வடிவத்தை மாற்றிய பசுமை போராளிகள்...!
Published on

பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கக்கோரி ஸ்விட்சர்லாந்தில் போராடி வரும் பசுமைப் போராளிகள், முழு முடக்கத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், ஸூரிச் சதுக்கத்தில் காலணிகளை வரிசையாக அடுக்கி வைத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிவரும் இக்குழுவினர், வெள்ளிக்கிழமை தோறும் ஸூரிச் நகரில் உள்ள சதுக்கத்திற்கு திரண்டுவந்து போராட்டம் நடத்துவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஸ்விட்சர்லாந்தில் ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதால், பசுமைப் போராளிகள் தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றியுள்ளனர்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராடிவரும்  மாணவி கிரேட்டா தன்பெர்க் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காலணிகளை அடுக்கி வைத்து போராட்டம் நடைபெற்றது. ஒரே ஒரு நபர் இத்தனை காலணிகளையும் வரிசையாக அடுக்கி வைத்தார். அப்போது பருவநிலை மாற்ற விவகாரத்திற்கு தீர்வு காண வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஸூரிச் சதுக்கம் அருகே போராட்டக்காரர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com