ஸ்வீடனில் பயங்கரம்: லாரியை ஏற்றி 4 பேர் கொலை

ஸ்வீடனில் பயங்கரம்: லாரியை ஏற்றி 4 பேர் கொலை

ஸ்வீடனில் பயங்கரம்: லாரியை ஏற்றி 4 பேர் கொலை
Published on

ஸ்வீடன் நாட்டில் கூட்டத்துக்குள் லாரியை ஏற்றி நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் குயின் தெருவில் உள்ள ஒரு வணிகவளாகத்தின் முன் நேற்று ஏராளமானோர் திரண்டு இருந்தனர். அப்போது

அங்கு லாரி ஒன்று வேகமாக வந்தது. அந்த லாரி மக்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

சம்பவ இடத்தை உடனடியாக முற்றுகையிட்ட போலீசார் அங்கிருந்தவர்களை பத்திரமாக அப்புறப்படுத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த ரயில் போக்குவரத்து

நிறுத்தப்பட்டது. சுரங்க நடைபாதைகளும் மூடப்பட்டன. லாரியை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப்

பெற்றுவருகின்றனர்.

இது பயங்கரவாத தாக்குதல் எனவும் இதனால் தங்கள் நாட்டு மக்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளதாகவும் ஸ்வீடன் பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த

தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதற்கிடையே இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு நபரையும் ஸ்வீடன்

போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com