தண்ணீரில் ஓடும் பைக்: பிரேசில் நாட்டு முதியவரின் அசத்தல்

தண்ணீரில் ஓடும் பைக்: பிரேசில் நாட்டு முதியவரின் அசத்தல்
தண்ணீரில் ஓடும் பைக்: பிரேசில் நாட்டு முதியவரின் அசத்தல்

பெட்ரோலுக்கு பதில் தண்ணீரை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் பைக் ஒன்றை பிரேசில் நாட்டு முதியவர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த முதியவர் ரிக்கார்டோ அஸேவெதோ. தன் வீட்டுக்குப் பின்னால் உள்ள சிறிய கேரேஜிலேயே தண்ணீரில் ஓடக்கூடிய பைக் ஒன்றை உருவாக்கி சாதித்துக் காட்டியுள்ளார். இதற்குத் தனது 1993 மாடலான ஹோண்டா என்எக்ஸ்200 பைக்கை தண்ணீரை கொண்டு இயங்கும் வகையில் முற்றிலும் உருமாற்றியுள்ளார். இதற்கு ‘டி பவர் ஹச்20 மோட்டார்பைக்’ என பெயரிட்டுள்ளார். இந்த பைக்கில் ஒரு லிட்டர் தண்ணீரை எரிபொருளாக செலுத்தினால் கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் வரை செல்லலாம்.

எலெக்ட்ரோலைசிஸ் எனப்படும் மின்னாற்பகுப்பு முறையின் அடிப்படையில் இந்த பைக் இயங்குகிறது. இந்த பைக்கில் கார் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் சக்தியானது தண்ணீரில் உள்ள ஹைட்ரோஜன் மூலக்கூறுகளை பிரித்தெடுக்கிறது. இப்படிப் பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரோஜன் மூலக்கூறுகள் அதிகளவில் வெளியேற்றப்படுகின்றன. இந்த மூலக்கூறுகளை வைத்துத்தான் பைக் இஞ்சின் தனக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது.

டி ப‌ர் ஹச் 20 மோட்டார் பைக்கில் இருந்து வெளியேறும் கழிவு, நீராவியாக வெளியேறுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதில்லை. இந்த பைக்கில் மற்றொரு சுவாரஸ்யம். நல்ல தண்ணீருக்கு பதிலாக மாசடைந்த ஆற்றிலிருந்து எடுக்கும் தண்ணீரைப் பயன்படுத்தினாலே பைக் இயங்குகிறது. இவரின் கண்டுபிடிப்பு ஆட்டோமொபைல் துறையையே முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் அமைந்துள்ளது. அதிக விலை கொடுத்து பெட்ரோல் உபயோகிக்கத் தேவையில்லை என்பதால் இது மக்களுக்கும், புகையை வெளியேற்றாததால் சுற்றுச்சூழலுக்கும் சேர்த்தே நன்மையைத் தருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com