sunita williams and her crew celebrate christmas in space share greetings
சுனிதா வில்லியம்ஸ்நாசா

விண்வெளி மையத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களுக்கு மேல் தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.
Published on

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ம் தேதி பூமிக்கு திரும்பும் நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, அவர்களை அழைத்து வர நாசா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாடியது. ஆனால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தற்போது கால தாமதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மேலும் அவர்கள் பூமிக்குத் திரும்ப ஒரு மாத காலம் ஆகலாம் என நாசா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோ பதிவு ஒன்றை நாசா வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ”பூமியில் உள்ள அனைவருக்கும், சர்வதேச விண்வெளி வீரர்களான எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் 7 பேர் இங்கே இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளோம்” என அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது.

sunita williams and her crew celebrate christmas in space share greetings
விண்வெளியில் தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. மீட்கச் செல்லும் விண்கலம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com