“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்

“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்

“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்
Published on

இலங்கையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர் மற்றும் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம் என இலங்கை ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் பயங்கரவாத தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அதேசமயம் தேசிய தவ்ஹீத் ஜமாத் இந்தப் பயங்கரவாத தாக்குதலில் முக்கிய பங்காற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பெண் உள்பட 9 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்தப் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர் மற்றும் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம் என இலங்கை ராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள இலங்கை ராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க, “ சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் இந்தியாவில் காஷ்மீர், பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு என்ன காரணத்திற்காக சென்றார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் சில வகையான பயிற்சிகளை அங்கு பெற்றிருக்கலாம். இல்லையென்றால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தங்களுடனான தொடர்பை விரிவுபடுத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதல் குறித்த இந்தியா முன்பே எச்சரிக்கை விடுத்தும் இலங்கை அதனை சரியாக கையாளவில்லையா எனக் கேட்டதற்கு “எங்களுக்கு இந்திய உளவுத்துறை தரப்பில் இருந்தும் சில முக்கிய தகவல்கள் வந்து இருந்தது. அதேபோல இலங்கை புலனாய்வு அமைப்பிடம் இருந்தும் தகவல்கள் வந்திருந்தன. இரண்டும் வெவ்வேறு விதமாக இருந்ததால் சரியான நடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டது. புலனாய்வு அமைப்பு, உயர் பதவி வகிக்கும் அரசியல்வாதிகள், நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் என அனைவரும் இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுத்தான் ஆக வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com