உலகம்
மசூதி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி!
மசூதி மீது தற்கொலைப்படை தாக்குதல் - 30 பேர் பலி!
ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு ஆப்கானிஸ்தானின் இதய பகுதியாக செயல்படும் ஹெராத் நகரில் மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் 2 பேரில் ஒருவன் கூட்டம் இருக்கும் இடத்திற்கு சென்று, தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான். இந்த தாக்குதலில் 30 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியானார்கள். இதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.