\
நவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி!

நவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி!

நவாஸ் ஷெரீப் வீடு அருகே தற்கொலை தாக்குதல்: 9 பேர் பலி!
Published on

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வீடு அருகே நடந்த தற்கொலை படை தாக்குதலில் 5 போலீசார் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 25 பேர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். இவரது பங்களா லாகூரில் உள்ளது. இந்தப் பகுதிக்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் செக் போஸ்ட் உள்ளது. இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அந்தப் பகுதிக்கு நேற்று வந்த டீன் ஏஜ் வயதுடைய தீவிரவாதி ஒருவன், தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை திடீரென்று வெடிக்க செய்தான். இதில் 5 போலீசார் உட்பா 9 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும் 15 போலீசார் உட்பட 25 பேர் காயமடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  

தற்போது துபாயில் நடந்து வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட்டின் அரை இறுதி போட்டிகள் லாகூர் நகரில் நடைபெற உள்ள நிலையில் இத் தாக்குதல் நடந்திருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com