single பொண்ணுங்க
single பொண்ணுங்கமுகநூல்

‘Single பொண்ணுங்க’ Vs ‘Single பசங்க’ அதிக மகிழ்ச்சியாக இருப்பது யார்? வெளியான ஆய்வு முடிவுகள்!

single ஆக இருக்கும் ஆண்களைவிட single ஆக இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
Published on

single என்ற வார்த்தையை பல single-ஸ் சொல்லி கேட்டிருப்போம். இவர்கள் பலரும், காதல் வாழ்க்கையை விட தனியாக தனக்கென வாழ்வதுதான் சிறந்தது என்று சொல்லியும் கேட்டிருப்போம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சில ஆய்வு முடிவுகளும் வெளியாகி இருக்கின்றன.

அந்தவகையில் சமீபத்திய ஒரு ஆய்வு முடிவு, ‘single ஆக இருக்கும் ஆண்களைவிட single ஆக இருக்கும் பெண்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்’ எனக் கூறியுள்ளது. இந்த ஆய்வு சொல்லும் மற்றவிஷயங்கள் என்ன? பார்க்கலாம்...

2020 - 2023 க்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட 10 ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு இந்த ஆய்வின் முடிவானது வெளியாகியுள்ளது. இந்த ஆய்வுக்காக single ஆக இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் என 5,941 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

18 முதல் 75 வயது வரையில் இருப்பவர்களும் சராசரியாக 31 வயது இருப்பவர்களும் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

single பொண்ணுங்க
குறைவான தூக்கம், ஆனால் புத்துணர்ச்சி.. சரியானதா? நவீன ஆய்வுகள் சொல்வது என்ன? மருத்துவர் விளக்கம்!

இவர்களிடம் தற்போதையை வாழ்க்கை நிலையில் உள்ள திருப்தி, பாலியல் தேவை, காதல் துணை குறித்தான கேள்விகள் எழுப்பப்பட்டன..

இதன் முடிவில்,

சிங்கிளாக இருக்கும் பெண்கள் சராசரியாக காதல் மட்டுமின்றி நட்பு, குடும்பம் போன்ற உறவுகளின் மூலம் சந்தோஷத்தை பெறுவதும், திருமணம் அல்லது காதல் போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது உடல்நலன், வேலை, பயணம் ஆகியவற்றை மேம்படுத்தும் வாய்ப்பாக கருதுவதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஆண்களை விட சிங்கிளாக இருக்கும் பெண்களே வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியாக இருப்பதாக இங்கிலாந்தின் nottingham பல்கலைக்கழகம் நடத்திய அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது..! இனிமே, ‘சிங்கிள் பொண்ணுங்கதான் கெத்து’போல!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com