பெல்ஜியம்: ஆசிரியைக்கு 101 கத்தி குத்து - 30 ஆண்டுகள் காத்திருந்து மாணவன் செய்த கொலை

பெல்ஜியம்: ஆசிரியைக்கு 101 கத்தி குத்து - 30 ஆண்டுகள் காத்திருந்து மாணவன் செய்த கொலை

பெல்ஜியம்: ஆசிரியைக்கு 101 கத்தி குத்து - 30 ஆண்டுகள் காத்திருந்து மாணவன் செய்த கொலை
Published on

பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் நகரில் வசித்து வந்த 59 வயது மதிக்கத்தக்க ஆசிரியையான மரியா வெர்லிண்டன் கடந்த 2020-இல் அவரது வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளியை பிடிக்க பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர். இருந்தும் அவர்களுக்கு துப்பு கிடைக்கவில்லை. 

ஆனால் ஒன்றில் மட்டும் போலீசார் உறுதியாக இருந்தனர். கொல்லப்பட்ட ஆசிரியை காசுக்காகவோ, பொருளுக்காகவோ கொல்லப்படவில்லை என போலீசார் அறிந்திருந்தனர். இந்நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட 16 மாதங்களுக்கு பிறகு கொலையாளி சிக்கியுள்ளான். 

தனது நண்பனிடம் தான் செய்த கொலை குறித்து கொலையாளி சொல்லியுள்ளான். அதை அந்த நண்பர் போலீசிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 37 வயது மிக்க கொலையாளி Gunter Uwents கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். 

“1990-களில் நான் பள்ளியில் பயின்ற போது ஆசிரியை மரியா என்னை வகுப்பறையில் வைத்து அவமானப்படுத்தினார். அதனால் அவரை கொலை செய்ய வேண்டுமென திட்டமிட்டேன். சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு அவரை நான் திட்டமிட்டபடி கொலை செய்தேன்” என Gunter Uwents போலீசில் தெரிவித்துள்ளதாக தகவல். தற்போது அவர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறதாம். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com