china matmo cyclone
china matmo cycloneweb

சீனாவில் தொடரும் புயல் தாக்குதல்.. மட்மோ புயலால் கொந்தளிக்கும் கடல்!

சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. இந்தசூழலில் மட்மோ புயல் நெருங்கும் நிலையில் கடல் கொந்தளித்து வருகிறது.
Published on
Summary

சீனாவில் புயல் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில் மழைப்பொழிவு அதிகமாக இருந்துவருகிறது. இந்தசூழலில் மட்மோ புயல் நெருங்கும் நிலையில் கடல் கொந்தளித்து வருகிறது.

சீனா அருகே கடல்பகுதியில் ஏற்பட்டுள்ள மட்மோ புயலால் ஹெய்னாவன் மற்றம் குவாங்டாங் மாகாணங்களில் பலத்த மழைப்பொழிவு உள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் கடுமையாக உள்ள நிலையில், கடலோர பகுதிகளில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

china matmo cyclone
china matmo cyclonechina matmo cyclone

இன்று நள்ளிரவு புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஒன்றரை லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். ரயில், விமான சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம்தான் தென் சீன பகுதியை ரகாசா புயல் சீரழித்த நிலையில் தற்போது மட்மோ என்ற மற்றுமொரு புயல் தாக்க உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com