‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா?’ - வைரல் போட்டோ 

‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா?’ - வைரல் போட்டோ 

‘என்னது; ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடு இருக்கிறாரா?’ - வைரல் போட்டோ 
Published on

சமூக வலைத்தளங்களில் பரவிய ஒருவரின் புகைப்படம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை வைரலாக்கியுள்ளது.

தொழில்நுட்ப சாதனங்களில் முன்னோடியாக திகழ்ந்து வரும் ஆப்பிள் நிறுவனத்துக்கு அடித்தளமிட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்துறையில் சாதிக்க துடிக்கும் பலருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸின் கதை ஊக்கமாக சொல்வதும் உண்டு. சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப அறிவாளி எனப் புகழப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் 2011ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக காலமானார். 

அப்போது அவருக்கு வயது 56. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் பரவிய ஒரு புகைப்படம் மீண்டும் ஸ்டீவ் ஜாப்ஸை வைரலாக்கியுள்ளது. எகிப்தில் எடுக்கப்பட்ட ஒருவரின் புகைப்படம் கிட்டத்தட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் போலவே இருந்தது. உடனடியாக அதனை பகிர்ந்த பலரும் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார் என பதிவிட்டனர். அதற்கு சில ஆதாரங்களையும் அவர்கள் கூறினர். ஸ்டீவ் ஜாப்ஸ் ஷூ அணிய விரும்ப மாட்டார். சமீபத்தில் வெளியான புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை என்று தெரிவித்தனர். 

இதற்குப் பதில் அளித்த மற்றொரு தரப்பு, அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் அணியவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை என நகைச்சுவையாக தெரிவித்தனர். இன்னும் சிலர் இதைப்பார்த்தால் Steve Jobs  போல தெரியவில்லை. Steve no job போல தெரிகிறது என கிண்டலடித்து வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com