மீண்டும் அரங்கேறிய கொடூரம்! சிட்னி தேவாலயத்தில் நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கத்தி குத்து நிகழ்வு அரங்கேறியுள்ளது.
சிட்னி தேவாலயத்தில் வன்முறை
சிட்னி தேவாலயத்தில் வன்முறைமுகநூல்

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கத்தி குத்து நிகழ்வு அரங்கேறியுள்ளது. சிட்னியில் உள்ள தேவாலயத்தில் புகுந்த ஒருவர், தான் வைத்திருந்த கத்தியால், பிராத்தனை செய்தவர்களை சரமாரியாக குத்தினார்.

சிட்னி தேவாலயத்தில் வன்முறை
சிட்னி தேவாலயத்தில் வன்முறை

இதில் ஒரு சில பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பிஷப் உட்பட 4 பேருக்கு படுகாயம் என சொல்லப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்களை காவல்துறையினர் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே கத்திக்குத்து நடத்தியது, 15 வயது சிறுவன் என தெரிகிறது. அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிட்னி தேவாலயத்தில் வன்முறை
Fact Check|ஈரானிய விமானங்களைச் சுட்டு வீழ்த்தினாரா ஜோர்டான் இளவரசி.. வைரலான செய்தி.. உண்மை என்ன?

எதற்காக தாக்குதல் நடத்தினார், இதன் பின்னணியில் யாரேனும் அல்லது எதுவும் அமைப்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சிட்னியில் உள்ள வணிக வளாகத்தில் கத்தியால் ஒருவர் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து வரும் இதுபோன்ற நிகழ்வுகள், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com