“மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” - இலங்கை அதிபர்

“மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” - இலங்கை அதிபர்
“மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்” - இலங்கை அதிபர்

இலங்கைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 351 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டுமே 303 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு பாஜக அழைப்பு விடுத்தது. இதைத்தொடர்ந்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதனிடையே பிரதமர் மோடி அண்டை நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதில் முதலாவதாக மாலத்தீவு பகுதிக்கு ஜூன் 7-9 தேதிகளில் செல்கிறார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி இலங்கை செல்கிறார். 

இந்நிலையில், இலங்கை அதிபர் சிறிசேன இந்திய பிரதமர் மோடியை இன்று டில்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பேசிய சிறிசேன, “இலங்கைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது. மோடியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அவரின் வருகையை பெருமையாக கருதுகிறோம். உலகம் முழுவதும் தலைதூக்கியுள்ள பயங்கரவாதம் அனைத்தையும் பாதித்துள்ளன. ஜனநாயக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தால்தான் பயங்கரவாதத்தை வீழ்த்த முடியும்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com