உலகம்
கடற்படைக்காக இந்தியாவிடமிருந்து கப்பல்களை வாங்கும் இலங்கை
கடற்படைக்காக இந்தியாவிடமிருந்து கப்பல்களை வாங்கும் இலங்கை
இந்தியாவில் இருந்து கடற்பாதுகாப்புக்காக கப்பல்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து கடற்பாதுகாப்புக்காக கப்பல்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ளது இலங்கை அரசு. இதுகுறித்து இலங்கை கடற்படை வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா, இதன் மூலம் கடற்பரப்பில் நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களை, ஒரு வருடத்திற்குள் நிரூபித்து காண்பிக்க முடியம். வரும் செப்டம்பர் மாதத்தில் ஒரு கப்பலும், அடுத்த ஆண்டு மூன்று கப்பல்களும் இலங்கைக்கு தரப்பட உள்ளதாக வைஸ் அட்மிரல் டிரவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுக்க இன்று முதல் கடல் எல்லைத் திட்டங்களை மாற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.