இலங்கை | அரிசி தட்டுப்பாட்டை நீக்க அதிபர் நடவடிக்கை!
இலங்கையில் அரிசி தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரிசி விற்பனையாளர்களுக்கு அந்நாட்டு அதிபர் அனுரகுமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் கடுமையான அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அரிசி ஆலை உரிமையாளர்களை ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க ஏற்கனவே 2 முறை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்ந்து நிலவுவதோடு, அரசு நிர்ணயித்த விலையைவிட சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதையடுத்து, மீண்டும் ஒருமுறை அரிசி வர்த்தகர்களைச் சந்தித்துப் பேசினார்.
இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ அரிசியை மொத்த விலையில் 225 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 230 ரூபாய்க்கும் விற்க அதிபர் அறிவுறுத்தினார். அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபர் அனுரகுமார திசநாயக்க எச்சரித்தார்.