\
சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் ! - இலங்கை அமைச்சர் தகவல்

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் ! - இலங்கை அமைச்சர் தகவல்

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் ! - இலங்கை அமைச்சர் தகவல்
Published on: 

இலங்கையின் சுதந்திர தின விழாவில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும்என்று அந்நாட்டு அமைச்சர் பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் உள்ளது. அதேபோல் இலங்கையிலும் ஒரே மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இலங்கையில் 2016-ம் ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இலங்கையின் 72-வது சுதந்திர தினம் 2020 பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெறுகிறது. கொழும்பு சுதந்திர தின சதுக்கத்தில் இந்த விழா நடைபெறும். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டதாக அமைச்சர் பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கையில் நடைமுறையில் இருந்து வருவதை திடீரென புதியதாக அமைந்துள்ள கோத்தபா ராஜபக்ச அரசாங்கம் தடை செய்திருப்பதால் தமிழர்கள் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com