பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

பொருளாதார நெருக்கடியால் தமிழகத்திற்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்
Published on

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து மேலும் 10 பேர்அடைக்கலம் கேட்டு தமிழகம் வந்துள்ளனர்.

இலங்கையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அவற்றை வாங்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து சிலர் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில், இலங்கையில் இருந்து பைபர் படகு மூலம் 5 சிறுவர்கள் உள்பட 10 பேர் தனுஷ்கோடி அடுத்த கம்பிபாடு பகுதிக்கு வந்திருந்தனர்.

அவர்களிடம் கடலோர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, இலங்கையின் தலைமன்னார் மற்றும் யாழ்பாணத்தில் இருந்து 3 சிறுவர்கள் உள்பட 6 பேர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com