உலகம்
இலங்கை: கொட்டும் மழையிலும் அரசுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்
இலங்கை: கொட்டும் மழையிலும் அரசுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம்
இலங்கையில் அதிபர் பதவி விலகக் கோரி கனமழையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் இரவு பகல் பாராமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கொழும்புவில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கையில் பதாகைகள் மற்றும் தீப்பந்தம் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதிபர் கோட்டாபய ராஜபக்ச உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். “கோ ஹோம் கோட்டா” என மக்கள் கோஷம் எழுப்பியபடி, காலிமுகத் திடலில் குவிந்துவருகின்றனர். வேறுபாடுகளை மறந்து ஒன்றாக நின்று போராடும் அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் கோட்டாபய ராஜபக்ச இறங்கியுள்ளார்.