இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமனம்?
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றிப் பெற்று அதிபராக பதவியேற்றார். இவர் பதவியேற்றவுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மகிந்த ராஜபக்ச இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். புதிய அதிபர் வந்தவுடன் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநராக முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது இலங்கையின் வடக்கு மாகாணத்தின் ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.
இவர் இலங்கையில் நடைபெற்ற போரின் போது ராஜபக்ச தரப்பிற்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து குறிப்பிடத்தக்கது. இலங்கையின் வடக்கு மாகாண பகுதியில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.