பரபரப்புக்கு மத்தியில் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: முந்தப்போவது யார்?

பரபரப்புக்கு மத்தியில் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: முந்தப்போவது யார்?
பரபரப்புக்கு மத்தியில் இலங்கையில் இன்று அதிபர் தேர்தல்: முந்தப்போவது யார்?

இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால், அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி வெளியேறினார். இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

இப்பதவிக்காக ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகம்பெரும, அனுர குமார திசாநாயக்க  ஆகியோரின் பெயர்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளன. அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தாம் அப்பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என்றுகூறி டலஸ் அழகப்பெரும பெயரை முன்மொழிந்துள்ளார்.

63 வயதாகும் டலஸ் அழகம்பெரும, சிங்கள புத்த மதத்தைச் சேர்ந்தவர். ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த கட்சியின் முக்கிய உறுப்பினராக இருப்பவர். 2005 முதல் அமைச்சர் பொறுப்புகளை வகித்தவர் அழகம்பெரும. மற்றொரு வேட்பாளரான 53 வயதாகும் அனுரா குமரதிசநாயக்க, இடதுசாரி ஜனதா விமுக்தி பெரமுனாவைச் சேர்ந்தவர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் இதுபோன்று அதிபரை தேர்ந்தெடுப்பது 1978-க்குப் பிறகு இதுவரை நடந்திராத ஒன்று. 1982, 88, 94, 99 மற்றும் 2005, 2010, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் மக்கள் வாக்களித்தே இலங்கை அதிபர் தேர்வு நடந்திருக்கிறது. 1993-ல் அப்போதைய அதிபர் ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டபோது காலியான பதவிக்கு DB Wijetunga நாடாளுமன்றத்தால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு இப்போது இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.

இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய அதிபர், கோட்டாபய ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலமான 2024 நவம்பர் மாதம் வரை பதவியில் இருப்பார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com