இலங்கை: ஈஸ்டர் தாக்குதலில் முன்னாள் அதிபர் மீது குற்றச்சாட்டு வைத்த கோட்டபய ராஜபக்ச!

இலங்கை: ஈஸ்டர் தாக்குதலில் முன்னாள் அதிபர் மீது குற்றச்சாட்டு வைத்த கோட்டபய ராஜபக்ச!
இலங்கை: ஈஸ்டர் தாக்குதலில் முன்னாள் அதிபர் மீது குற்றச்சாட்டு வைத்த கோட்டபய ராஜபக்ச!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சரவையை குற்றவாளிகள் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாக அதிபர் கோட்டபய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட ஆணையக் குழுவே முன்னாள் அதிபர் உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டி உள்ளதாகவும் அவர் கூறினார். அந்த ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதே நேரம் அந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் மற்றும் காவல்துறையினரிடமும் அளிக்கப்பட்டுள்ளதக ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த தேவையான சட்டத்தை நிறைவேற்ற தேவையான பெரும்பான்மை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உயர் தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள கல்யாணி பொன் நுழைவாயில் என பெயரிடப்பட்டுள்ள பாலத்தை திறந்து வைத்து உரையாற்றும் போது அவர் இதை கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com