இலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த போலீஸ்?
இலங்கை கண்டியில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது போலீஸார் வேடிக்கைப் பார்த்ததாக வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மியான்மரில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ரோஹிங்கியாக்கள் இலங்கையில் தஞ்சம் அடைய புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் கண்டியில் உள்ள முஸ்லிம் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். மசூதிகள் மற்றும் முஸ்லிம்களின் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. பிரச்னை மேலும் அதிகரிக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
அத்துடன் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு காரணமாக கருதப்பட்ட மஹாசன் பலகயா என்ற சிங்கள புத்த அமைப்பின் மூத்த தலைவருடன், 300 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில், முஸ்லிம்களின் கடைகளும், மசூதிகளும் தாக்கப்படும் போது போலீஸார், தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவாக செயல்ப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதை புத்த அமைப்பின் தலைவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

