தொடர் குண்டுவெடிப்பு: மன்னிப்புக்கேட்டது இலங்கை அரசு

தொடர் குண்டுவெடிப்பு: மன்னிப்புக்கேட்டது இலங்கை அரசு

தொடர் குண்டுவெடிப்பு: மன்னிப்புக்கேட்டது இலங்கை அரசு
Published on

வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்ததற்கு மக்களிடம் இலங்கை அரசு மன் னிப்பு கேட்டுள்ளது.

ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. இதில், இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உள்பட 27 வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர், பல்வேறு மருத்து‌மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் 7 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 

தொடர் குண்டுவெடிப்பு காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்ட நிலையில், அவசர நிலையையும் அறிவித்தார் அதிபர் சிறிசேன. நாடு தழுவிய துக்கமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசார ணை நடந்துவருகிறது. 

இந்நிலையில், தொடர் குண்டு வெடிப்புத் தொடர்பாக, மக்களிடம் இலங்கை அரசு மன்னிப்புக் கேட்டுள்ளது. தாக்குதல் தொடர் பான உளவுத்துறை எச்சரிக்கையை அலட்சியம் செய்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ரஜித சேனரத்ன தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com