டிட்வா புயல்
டிட்வா புயல்pt web

இலங்கையை சூறையாடிய 'டிட்வா'.. அவசர நிலையை அறிவித்த அரசு., அடுத்தக் குறி தமிழ்நாட்டிற்கா..?

டிட்வா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம், 'டிட்வா' புயல் எதிரொலியாக இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு என்ன நடக்கிறது பார்க்கலாம்!
Published on

இலங்கையில், நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கிய கனமழை 10 நாட்கள் நீடித்தது. இந்த கோர மழையால் இலங்கையில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளபெருக்கில் சிக்கி இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை வெள்ளம்
இலங்கை வெள்ளம்pt web

இதில், அதிகபட்சமாக, பதுளை மாவட்டத்தில் 47 பேரும், மத்திய மாகாணத்தில் 13 பெரும் பலியாகியுள்ளனர். நுவரெலியா - வலப்பனை உள்ளிட்ட பல இடங்களில் 130க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் 17 மாவட்டங்கள் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள வீடுகள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் முக்கிய சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கனமழை இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என்பதால் அங்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கும் படி வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

டிட்வா புயல்
Cyclone Ditwah | நாளை இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்., வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா பேட்டி.!

இந்த நிலையில், இலங்கையில் இன்று அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. 'டிட்வா' புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் கடும் சேதாரம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிட்வா புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில், புயல் சேதாரம் கடுமையாக இருப்பதால் இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதே போல் வானிலை மோசமாக உள்ளதால், துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா புறப்பட்ட விமானம், கொழும்பில் தரையிறக்கப்பட்டுள்ளது.அதில் உள்ள 300க்கும் மேற்பட்ட பயணிகள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை, வெள்ளத்தின் போது, கலாயோ பகுதியில் பேருந்தில் சிக்கிய 68 பேரை இலங்கை ராணுவத்தினர் மீட்டுள்ளனர். டிட்வா புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

டிட்வா புயல்
Cyclone Ditwah : சென்னைக்கு தெற்கே 290 கிலோ மீட்டர்.. 2 மாவட்டங்களுக்கு Red Alert
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com