இலங்கை டூ ஆஸ்திரேலியா: படகில் செல்ல முயன்ற 64 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

இலங்கை டூ ஆஸ்திரேலியா: படகில் செல்ல முயன்ற 64 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

இலங்கை டூ ஆஸ்திரேலியா: படகில் செல்ல முயன்ற 64 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Published on

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 64 பேருடன் மீன்பிடி இழுவை படகையும் இலங்கை கடற்படையி கைது செய்தது.

இலங்கை கடற்படையினரால் இன்று காலை (15 ஜூன் 2022) கிழக்கு கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்து நடவடிக்கையின் மூலம் கடல் வழியாக நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு இடம்பெயர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் திருகோணமலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகை இடைமறித்து சோதனையிட்டபோது, கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற சட்டவிரோத குடியேற்றவாசிகள் என நம்பப்படும் 64 பேரையும், சட்டவிரோத நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகையும் கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் திருகோணமலை துறைமுக போலீஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com