இலங்கையில் வானில் பறந்துகொண்டிருந்த சிறிய ரக விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் வயல்வெளியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கொழும்பு இரத்மலானையில் இருந்து சீகிரியாவுக்கு சுற்றுலாப் பயணிகளுடன் சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அவசரமாக வயல் வெளியில் தரையிறக்கப்பட்டது. இதில் விமானிகள் மற்றும் பயணிகள் 4 பேர் படுகாயமடைந்தனர்.
சக்குராய் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்கள் இதுபோன்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதால் அந்நிறுவனத்தின் விமான சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.