இலங்கையில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டினார். மேலும், மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கான திருத்தச் சட்டத்தை, உள்ளாட்சிமன்ற அமைச்சர் தன்னிடம் நேற்று அளித்ததாகவும், அதற்கான அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். வரும் 19ஆம் தேதி தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தில் தேர்தல் தேதி மற்றும் வேட்புமனு தாக்கல் செய்வது குறித்தும் அறிவிப்பு வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை தெரிவித்தார்.

