இலங்கையில் 87 டெடனேட்டர்கள் கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்

இலங்கையில் 87 டெடனேட்டர்கள் கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்

இலங்கையில் 87 டெடனேட்டர்கள் கண்டுபிடிப்பு : அச்சத்தில் மக்கள்
Published on

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பை அடுத்து நடத்தப்பட்ட தீவிர சோதனையில் 87 டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இலங்கையின் வர்த்தக மையம் அமைந்துள்ளதற்கு அருகே உள்ள கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடமட்டாம் அங்கு அதிகம் காணப்படவில்லை. இருப்பினும் கண்டுபிடிக்கப்பட்ட டெடனேட்டர்களுக்கும், நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என இலங்கை காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

இதுமட்டுமின்றி மன்னார் ஓலை தொடுவாய் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டும் மீட்கப்படுள்ளது வெடிகுண்டு மற்றும் டெடனேட்டர்களை செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெடிகுண்டுகள் இருக்கின்றனவா ? என்ற சோதனையிலும் நிபுணர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று இலங்கையில் ஈஸ்டர் திருநாளான்று 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 290 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com