\
இலங்கை: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

இலங்கை: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதி

இலங்கை: சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதி
Published on: 

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்கள் பெற்று செல்கின்றனர். எரிவாயு சிலிண்டர்களுக்கு இலங்கையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விற்பனை மையங்களை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

எனவே டோக்கன் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 100 நபர்களுக்கு மட்டும் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என முகவர்கள் தெரிவித்துள்ளனர். சிலிண்டர் பற்றாக்குறை தீர்ந்து நிலைமை சீரடைய இன்னும் 3 நாட்கள் ஆகும் எனவும் விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com