பசுக்களை இறைச்சிக்காக வெட்டத் தடை விதித்து இலங்கையில் விரைவில் சட்டம்?

பசுக்களை இறைச்சிக்காக வெட்டத் தடை விதித்து இலங்கையில் விரைவில் சட்டம்?
பசுக்களை இறைச்சிக்காக வெட்டத் தடை விதித்து இலங்கையில் விரைவில் சட்டம்?

பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என இலங்கை பிரதமர் ராஜபக்சே அண்மையில் அறிவித்திருந்தார்.

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அண்மையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பேசியபோது "பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதை தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்" என தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இலங்கையில் மதம் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் புத்த சாசனா தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறும்பேது “பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடுக்க வேண்டும் என புத்த மத மறுமலர்ச்சி பிக்ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை சட்டமாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை" என்றார்.

மேலும் " இப்போது எங்கள் அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால் இறைச்சி சாப்பிடுவோருக்காக இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும்" என்றார் ராஜபக்சே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com