தமிழர்களுக்கு சித்ரவதை: இலங்கை அரசு மீது மீண்டும் குற்றச்சாட்டு

தமிழர்களுக்கு சித்ரவதை: இலங்கை அரசு மீது மீண்டும் குற்றச்சாட்டு

தமிழர்களுக்கு சித்ரவதை: இலங்கை அரசு மீது மீண்டும் குற்றச்சாட்டு
Published on

ஐரோப்பாவில் அடைக்கலம் கேட்டுள்ள தமிழர்களை இலங்கை அரசு சித்ரவதை செய்வதாகவும், தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த நவம்பர் 8ஆம் தேதி அசோசியேட் என்ற நியூயார்க் பத்திரிக்கை ஒன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஐரோப்பாவில் அரசியல் அடைக்கலம் கேட்டு தமிழர்கள் பலர் காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குவதாகவும், அத்துடன் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அங்குள்ள தமிழர்களிடம் இருந்து பெற்றதாகவும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் கபில வைத்யரத்னே முற்றிலும் மறுத்துள்ளார். கனடாவின் வான்கூவர் நகரில் நடந்து வரும் ஐ.நா.வின் அமைதி நடவடிக்கைக்கான பாதுகாப்புத் துறை கருத்தரங்கில் பங்கேற்ற அவர், இலங்கை அரசு மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்று கூறினார். மேலும் இந்த குற்றங்களை அரசு பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com