fisher manpt desk
உலகம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேருக்கு நவ.9 வரை நீதிமன்ற காவல்
ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேருக்கு நவ.9 வரை நீதிமன்ற காவல் வழங்கி மன்னார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க 23 மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அப்போது தலைமன்னார் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் இன்று தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
fisher manpt desk
வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் 23 பேரும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.