‘மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ச்சில் தாக்குதல்’ - இலங்கை அமைச்சர் தகவல்

‘மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ச்சில் தாக்குதல்’ - இலங்கை அமைச்சர் தகவல்
‘மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக சர்ச்சில் தாக்குதல்’ - இலங்கை அமைச்சர் தகவல்

நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை அமைச்சர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை, இலங்கையின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. காலை 8.45 மணி முதல் 9.05 மணிக்குள் 6 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறின. பிற்பகல், 1.45 மணியளவில் தெஹிவளையில் தேசிய உயிரியல் பூங்கா அருகே உள்ள நட்சத்திர ஓட்டலிலும் வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. மொத்த 8 முறை தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. 

குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து பலவிதமான கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக தேவாலயங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ருவர் விஜிவர்த்தனே தெரிவித்துள்ளார். ஆரம்பகட்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், குண்டுவெடிப்பு தாக்குதலில் 38 வெளிநாட்டினர் உட்பட 321 பெர் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலுக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பே காரணம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ரஜிதா செனரத்னே நேற்று கூறியிருந்தார். 

மார்ச் 15இல் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் இரண்டு மசூதிகளில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மசூதியில் இருந்த 55 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிர்ழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இலங்கை நாடாளுமன்றத்தில் 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தாக்குதலையொட்டி இன்று இலங்கை அரசு துக்கம் அனுசரிக்கின்றது. அதன்படி, அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com