யானைகள்
யானைகள்pt web

இலங்கையில் ஓராண்டில் மட்டும் 470 யானைகள் உயிரிழப்பு

இலங்கையில் ஓராண்டில் 470 யானைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு வன உயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரையிலான காலங்களில் 470க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன. துப்பாக்கிச்சூடு, மின்சாரம் தாக்கியும் 196 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஉயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது. இவைகளில், 83 யானைகள் துப்பாக்கிச் சூட்டினாலும், பொறிவெடிகளால் 47யானைகளும், மின்சார தாக்கி 66 யானைகளும், தீ விபத்தால் 23 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் ஒரு யானையும், உடம்பில் நஞ்சு கலந்ததால் 4 யானைகளும், நீரில் அடித்துச் சென்று ஒரு யானையும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள வனஉயிரினங்கள் பாதுகாப்பு அமைப்பு, விளைநிலங்களில் சிக்கி 5 யானைகளும், எதிர்பாராதவிதமாக 15 யானைகளும், நோய்த்தாக்குதலால் 2 யானைகளும் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அழுகிய நிலையில் 15 யானைகளும், சிதைந்த நிலையில் 28 யானைகளும் கண்டெடுக்கப்பட்டதாகவும், இயற்கையாக 10 யானைகள் மரணமடைந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அடையாளப்படுத்தப்படாத மற்றும் வேறு காரணங்களால் 138 யானைகள் உயிரிழந்திருப்பதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் மஞ்ஜூல அமரரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com