\
“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” :  இலங்கை பிரதமர் சிறிசேன

“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன

“என் உயிரு‌க்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” : இலங்கை பிரதமர் சிறிசேன
Published on

போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் தனது உயிருக்கு அச்சுறு‌த்தல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபா‌ல சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். 

இந்நிலையில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கை உளவுத்துறை அமைப்பு மூலம் இந்தத் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com