கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு சாண்டா சுற்றுலா ரயில்... எங்கே தெரியுமா?

விழாக்கால சிறப்பு ரயில்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவையாகவே இருக்கும். அப்படி ஒரு சிறப்பு ரயில் மக்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது. எங்கே? பார்க்கலாம்...
Santa Train
Santa TrainTwitter

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் இயக்கப்படும் சுற்றுலா ரயில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அதனைக் கொண்டாட பல்வேறு நாடுகளும் தயாராகி வருகின்றன. இனிப்பகங்களில் கேக் தயாரிக்கப்பட, கட்டடங்களில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கின்றன.

Christmas festival
Christmas festivalpt desk

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில், சிகாகோ நகரில் ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. அங்கு மக்களை உற்சாகப்படுத்தும் வகையில், சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. ரயில் பெட்டிகளைச் சுற்றி ஏராளமான மின்விளக்குகள் மிளிர, அதில் பயணம் செய்பவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

Santa Train
"இஸ்ரேலுக்கான ஆதரவு குறைந்து வருகிறது.." - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

இரண்டு ரயில் பெட்டிகளுக்கு நடுவே தனியாக இடம் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்க, அதில் சாண்டா கிளாஸ் வேடம் தரிப்பவர்கள் பயணம் செய்து குழந்தைகளை உற்சாகப்படுத்துகின்றனர்.

இரவில் கண்ணை கவரும் ஒளிக்கீற்றுடன் செல்லும் இந்த ரயிலில் பயணிப்பதற்கு பலரும் ஆர்வம் காட்டுவதால், கூட்டம் அலைமோதுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com