ஸ்பெயினை பிரிக்க விடமாட்டோம்: பிரதமர் ரஜோய் திட்டவட்டம்

ஸ்பெயினை பிரிக்க விடமாட்டோம்: பிரதமர் ரஜோய் திட்டவட்டம்
ஸ்பெயினை பிரிக்க விடமாட்டோம்: பிரதமர் ரஜோய் திட்டவட்டம்
Published on

ஸ்பெயின் ஒருபோதும் இரண்டாக பிரியாது என்றும், தேசிய ‌ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்றும் அந்நாட்டின் பிரதமர் மரியானோ ரஜோய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் தனி நாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக கேட்டலோனியா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை அந்தப் பிராந்திய ‌தலைவர் கார்லஸ் இன்று கூட்டவுள்ளார். அதை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனிநாடு கோரி நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்குப் பின் பிபிசிக்கு பேட்டியளித்த கேட்டலோனியா பிராந்திய அரசின் தலைவர் கார்லஸ் விரைவில் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.

பொதுவாக்கெடுப்பின்போது ஸ்பெயின் காவல்துறையினரால் ஏற்பட்ட வன்முறைக்கு 900 பேர் படுகாயமடைந்தனர். காவல்துறையினர் தரப்பிலும் 33 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்த வன்முறைக்கு இடையிலும் பொதுவாக்கெடுப்பு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 90 சதவிகித வாக்காளர்கள் தனி கேட்டலோனியாவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்திருந்தனர்.

இந்த முடிவை ஏற்க மறுத்த ஸ்பெயின் அரசு, சட்டவிரோதமான முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாக கண்டனம் தெரிவித்தது. இந்தச் சூழலில் பிபிசிக்கு பேட்டியளித்த கேட்டலோனியா தலைவர் கார்லஸ் மக்களின் விருப்பத்துக்கேற்ப விரைவில் தனி கேட்டலோனியா நாடு உருவாகும் என தெரிவித்தார்‌. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்பெயின் அரசு, கேட்டலோனியா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தால் ‌என்ன செய்வீர்கள் என நிருபர் கேள்வி எழுப்பியதற்கு, அனைத்தையும் மாற்றக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய தவ‌றாக ‌அந்நடவடிக்கை அமையும் என கார்லஸ் பதில் அளித்தார்.

இந்நிலையில், தனி நாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்காக கேட்டலோனியா நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை அந்தப் பிராந்திய ‌தலைவர் கார்லஸ் இன்று கூட்டவுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com