ஸ்பெயினில் இருந்து பரவிய காட்டுத் தீ: போர்ச்சுக்கலில் 36 பேர் பலி

ஸ்பெயினில் இருந்து பரவிய காட்டுத் தீ: போர்ச்சுக்கலில் 36 பேர் பலி

ஸ்பெயினில் இருந்து பரவிய காட்டுத் தீ: போர்ச்சுக்கலில் 36 பேர் பலி
Published on

ஸ்பெயினில் இருந்து போர்ச்சுகலுக்கு பரவி‌ய காட்டுத் தீயில் சிக்கி, இதுவரை 36 பேர் உயிரி‌ழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஸ்பெயினின் வடமேற்கு பகுதியான கலிசியாவில் ‌திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ, பல்வேறு பகுதிகளுக்கும் விரைவாக பரவியது. இதையடுத்து நிக்ரான் என்ற நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் பற்றிய தீயில், இரண்டு பேர்‌ உ‌டல் கருகி உயிரிழ‌ந்தனர். அத்துடன் குடியிருப்பு பகுதியில் பரவி ஒருவர் உயிரிழந்தார். 

இந்நிலையில் காட்டு தீ அண்டை நாடான போர்சுகலுக்கும் பரவியதில், அங்கு இதுவரை 36 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் காட்டுத் தீயை அணைக்க சர்வதேச நாடுகளின்‌ உதவியை நாடியுள்ள போர்ச்சுகல், உயிரிழப்புக‌ளை தடுக்க அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. ஸ்பெயினிலும் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com