உலகம்
ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத் தீ: 3 பேர் உடல் கருகி பலி
ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத் தீ: 3 பேர் உடல் கருகி பலி
ஸ்பெயினில் ஏற்பட்ட காட்டுத் தீ அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதில் 3 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
ஸ்பெயினின் வடமேற்கு பகுதியான கலிசியாவில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீ பல்வேறு பகுதிகளுக்கும் விரைவாக பரவியது. இதையடுத்து நிக்ரான் என்ற நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் பற்றிய தீயில், இரண்டு பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அத்துடன் குடியிருப்பு பகுதியில் பரவி ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதால், பொதுமக்களும், தீயணைப்புப் படை வீரர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தீ அண்டை நாடான போர்சுகலுக்கும் பரவியதில், அங்கு 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.