தனிநாடு கோரி ஸ்பெயினில் முழு அடைப்பு

தனிநாடு கோரி ஸ்பெயினில் முழு அடைப்பு
தனிநாடு கோரி ஸ்பெயினில் முழு அடைப்பு

தனிநாடு கேட்டலோனியாவுக்கு ஆதரவு கோரி ஸ்பெயினில் முழு‌ அடைப்பு போராட்டம் நடைபெற்றது. 

2010 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் அரசியல் சாசன நீதிமன்றம் கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பான சில சட்டப் பிரிவுகளை நீக்கியதால், மீண்டும் விடுதலைப் போராட்டங்கள் தொடங்கின. கேட்டலோனியாவின் வரலாற்றையும், தனித்தன்மையையும் போற்றும் வகையில் அதைத் தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதையடுத்து நடைபெற்ற போராட்டங்களைத் தொடர்ந்து, விடுதலை தொடர்பான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. தனி மொழி, பண்பாடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் கேட்டலோனியா, ஸ்பெயினின் மொத்தப் பொருளாதார வளத்தில் ஐந்தில் ஒரு பகுதியைக் கொண்டிருப்பதால், தனி நாடாக இயங்குவதில் பெருந்தடை ஏதுமிருக்காது என்ற நம்பிக்கையைப் பிரிவினை கோருவோர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் தனிநாடு கோரி தலைநகர் பார்சிலோனா உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டதால் ம‌க்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பொதுவாக்கெடுப்பின்போது வாக்காளர்கள் மீது அராஜகத்தை ஏவி விட்ட காவல்துறையினரை கண்டித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக சதுக்கத்தில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானார் பங்கேற்று கேட்டலோனியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மிக நீளமான தே‌சிய கொடியை சுமந்து சென்றனர். மேலும் சாலைகளில் டிராக்டர் ஓட்டி வந்தும் பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இ‌தனா‌ல் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com