ராக்கெட்டை பூமிக்கு திருப்பும் சோதனை: ஸ்பேக் எக்ஸ் மீண்டும் வெற்றி

ராக்கெட்டை பூமிக்கு திருப்பும் சோதனை: ஸ்பேக் எக்ஸ் மீண்டும் வெற்றி

ராக்கெட்டை பூமிக்கு திருப்பும் சோதனை: ஸ்பேக் எக்ஸ் மீண்டும் வெற்றி
Published on

விண்ணில் செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு ஃபால்கான் 9 ராக்கெட் மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் மேற்கொண்ட சோதனையில் ஸ்பேக் எக்ஸ் நிறுவனம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செலவை குறைக்க செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திவிட்டு, ராக்கெட்டை மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் சோதனை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பல்கேரியாவின் தகவல்தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஃபால்கான் 9 ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. 
குறிப்பிட்ட தொலைவு பயணித்த பின், முதல் பாகம் பிரிந்து ராக்கெட் பூமியை நோக்கி திரும்பியது. சரியாக 8 நிமிடங்களுக்கு பின்னர் ஃபுளோரிடாவின் கிழக்கு கரையோரத்தில் இருந்த டிரோன் கப்பலில் அந்த ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், மணிக்கு பல மைல் வேகத்தில் சீறிப்பாயும் ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்க முடியும் என்பதை இரண்டாவது முறையாக நிரூபித்து காட்டியுள்ளது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பலமுறை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஃபால்கான் 9 என்ற ராக்கெட் விண்ணுக்குச் சென்று மீண்டும் பூமிக்குத் திரும்பியது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com