'எலான் மஸ்கிற்கு கடிவாளம் போடுங்கள்' -கடிதம் எழுதிய ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் அதிரடி நீக்கம்

'எலான் மஸ்கிற்கு கடிவாளம் போடுங்கள்' -கடிதம் எழுதிய ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் அதிரடி நீக்கம்
'எலான் மஸ்கிற்கு கடிவாளம் போடுங்கள்' -கடிதம் எழுதிய ஸ்பேஸ் எக்ஸ் ஊழியர்கள் அதிரடி நீக்கம்

எலான் மஸ்க்கை விமர்சித்து கடிதம் எழுதிய ஊழியர்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியேற்றியுள்ளது.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். இதனிடையே எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருகிறார். இதற்காக 44 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் பேசியுள்ளார். எனினும் தற்போது இந்த ஒப்பந்தம் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் எலோன் மஸ்க்கின் ட்விட்டர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள்  அந்த நிறுவனத்தின் தலைவர் க்வின் ஷாட்வெல்லுக்கு கூட்டாக கடிதம் ஒன்று எழுதினர். இந்த கடிதத்தில், எலான் மஸ்க் தொடர்ந்து நிறுவனத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தி வருவதாகவும், எலான் மஸ்கிற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடிவாளம் போட வேண்டும் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பிய பல ஊழியர்கள் அந்நிறுவனத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனை 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்கலாம்: இந்த நாடுகளில் எல்லாம் ராணுவப் பயிற்சி கட்டாயம்!


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com